Saturday, November 23, 2024

Latest Posts

கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கு முழு உரிமையுடைய காணி உறுதிகள்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கருதிட்டத்தின் பேரில் நடைமுறைப்படுத்தப்படும் சிக்கலற்றவகையில் பூரண காணி உரிமையை அனைவருக்கும் வழங்கும் “உறுமய” வேலைத்திட்டத்தின் கிளிநொச்சி மாவட்ட நிகழ்ச்சி நேற்று (25) முற்பகல் இரணைமடு நெலும் பியச மண்டபத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெற்றது.

கிளிநொச்சி மாவட்டத்தின் 4 பிரதேச செயலகப் பிரிவுகளை உள்ளடக்கிய 1700 முழு உரிமையுடைய காணி உறுதிப்பத்திரங்கள் இங்கு வழங்கப்பட்டதுடன், அடையாள ரீதியாக சில உறுதிப் பத்திரங்கள் ஜனாதிபதியினால் வழங்கி வைக்கப்பட்டன.

இதன்போது உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அரிசியில் தன்னிறைவு அடையவதற்குப் பக்காற்றி வரும் வன்னி மாவட்ட மக்களுக்கு இந்தக் காணி உரிமையை வழங்க முடிந்தமை அரசாங்கம் பெற்ற தனித்துவமான வெற்றியாகும்.

விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தின் கீழ் நாட்டில் நவீன விவசாயத்தை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, விவசாயிகளின் காணி உரிமையை உறுதிப்படுத்துவது இந்த வேலைத்திட்டத்தை வலுவாக முன்னெடுக்க உதவும் எனவும் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் கூறியதாவது,

நான் மேடைக்கு வர முன்னர் மேடையில் அற்புதமான நடனமொன்று அரங்கேற்றப்பட்டது.

விவசாயிகளின் பெருமையை அவர்கள் அந்த நடனத்தில் எடுத்திக் காட்டியிருந்தார்கள். கிளிநொச்சி பிள்ளைகளிடம் இருக்கும் விசேட திறமையைக் கண்டோம். அவர்களை நாம் ஊக்குவிக்கவேண்டும். கிளிநொச்சி நகரம் துரிதமாக வளர்ந்து வருகிறது. மாகாண சபைகளின் கலாச்சார பிரிவுகளுடன் கலந்துரையாடி இவர்களுக்கு எவ்வாறு உதவ முடியும் என்று கலந்துரையாடவுள்ளேன்.

யாழில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியில் சிறந்த பாடல்களை செவிமடுத்தேன். நீண்டகாணி காலத்தின் பின்னர் இவ்வாறு சிறந்த பாடல்களைக் கேட்டேன். தென் இந்தியாவில் இருந்து இசைக்குழுவொன்றை அழைத்துவந்து யாழ்ப்பாணத்தில் இசை நிகழ்ச்சியொன்றை நடத்துமாறு இளைஞர் சேவை மன்றத்திடம் கோரிக்கை விடுத்தேன். அதில் நீங்களும் கலந்து மகிழ முடியும்.

தற்போது மக்களுக்கு காணி உறுதிப் பத்திரங்களை வழங்க இங்கு கூடியுள்ளோம். இந்த உறுதிகளை வழங்க முன்னர் மாகாண ஆளுநர்களின் அனுமதியைப் பெற்றுக்கொண்டோம்.

வெள்ளையர்கள் உருவாக்கிய சட்டத்தின் அடிப்படையில் இந்த காணிகள் வழங்கப்படுகின்றன.

வெள்ளையர்கள் இந்தக் காணிகளைப் பாதுகாத்தனர். நீங்களும் இந்தக் காணிகளைப் பாதுக்க வேண்டும். இந்த விடயம் தொடர்பாக ஆராய்வதற்கு பாராளுமன்ற குழுக்கும் பணிப்புரை விடுக்கவுள்ளேன். உண்மையில் இந்த காணி உரிமைகள் மக்களுக்கு கிடைக்க வேண்டும். எமது விவசாயிகள் அரிசியல் தன்னிறைவு அடைந்த நாட்டை உருவாக்கியுள்ளார்கள்.

2003ஆம் ஆண்டு நான் பிரதமாக இருந்தபோது அரிசியில் தன்னிறைவு அடைந்தோம். அதற்கு முன்னர் இந்த நிலைமை இருக்கவில்லை. அப்போது வன்னிப் பிரதேசம் புலிகள் கட்டுப்பாட்டில் இருந்தது. போர் நிறுத்த ஒப்பந்தம் செய்துகொண்ட பின்னர் உரம் அனுப்புவது குறித்து ஆராய்ந்தோம். உரத்தைப் பயன்படுத்தி ஆயுதங்களைத் தயாரிக்கக் கூடும் என்ற அச்சம் இருந்தது. இதுகுறித்து உயர் இராணுவ அதிகாரிகளுடன் கலந்துரையாடினோம்.

யுத்த நிறுத்தம் ஏற்படுத்தப்பட்ட பின்னர் வன்னிப் பிரதேசத்திற்கு உரத்தை வழங்கினோம். 2003ஆம் ஆண்டு அரிசி உற்பத்தியில் இலங்கை தன்னிறைவு பெற்றது. அரிசி உற்பத்தியில் தன்னிறைவு அடைந்ததில் வன்னி, அநுராதபுரம், பொலன்னறுவ மாவட்டங்களுக்கு பெரும் பங்கு இருக்கிறது.

தற்போது சிலருக்கு காணி உரிமை கிடைத்துள்ளது. விவசாயக் காணி உரிமை கிடைக்கிறது. நவீன விவசாயத்தை அறிமுகப்படுத்தவுள்ளோம். இதனைப் பயன்படுத்தி, போட்டித் தன்மைமிக்க விவசாயத்துறையை ஏற்படுத்த முடியும் என்று நம்புகிறேன். இதன்மூலம் விவசாயத்துறை வளர்ச்சி பெறும். உலக சனத் தொகையும் அதிகரித்து வருகிறது. இதன்மூலம் அதிகரித்து வரும் சனத் தொகைக்கு எங்களுக்கு உணவளிக்க முடியும். தற்போது நாம் முன்னெடுத்துள்ள வேலைத் திட்டத்தில் வன்னிக்கு மிகப் பெரிய வகிபாகம் இருக்கிறது.

உங்களின் காணிகளை நீங்கள் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். போரினால் காணிகளை இழந்தவர்கள் பெரும்பாலானோர் இருக்கின்றனர். தற்போது கிடைக்கும் காணிகளை இழந்துவிடக் கூடாது. நீங்கள் இந்தக் காணிகளில் விவசாயம் செய்து. வீடுகளைக் கட்டி அவற்றை உங்களுக்குப் பின்னர் உங்கள் பிள்ளைகளுக்கு வழங்குகள். இந்த பொறுப்பு உங்களுக்கு இருக்கிறது. இதனை நீங்கள் செய்ய வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.