பொன்சேகாவை பீடித்துள்ள ஜனாதிபதி வேட்பாளர் காய்ச்சல்!

0
59

முன்னாள் இராணுவத் தளபதியும், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் பொன்சேகா, ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கும் உறுதியான நிலைப்பாட்டை எடுத்துள்ளார்.

சத்தம் போடுவதையும் கட்டளையிடுவதையும் தவிர மக்களுடன் இணைந்து செயற்படும் திறமை தனக்கு இல்லையென்றாலும் நாட்டின் ஜனாதிபதி பதவிக்கு தாம் தகுதியானவர் என சரத் பொன்சேகா நினைக்கின்றார்.

இந்த ஜனாதிபதி வேட்பாளர் நோய் அவ்வப்போது தீவிரமடைவதால், அவர் பல பிரச்சனைகளை முன்வைக்கிறார்.

இப்போதும் ஐக்கிய மக்கள் சக்திக்கு எதிராக நீதிமன்றம் சென்றுள்ளார். எவ்வாறாயினும், அந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க சஜித் தரப்பிலிருந்து பொன்சேகாவுடன் சமாதானப் பேச்சுக்களுக்குச் சென்ற மூத்த ஒருவரிடம், சமாதானம் ஏற்பட வேண்டுமானால், ஜனாதிபதி வேட்பாளர் தானே தேவை என்று அவர் கூறினார்.

அங்கு அமைதிப் பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நாட்களில், பொன்சேகாவின் அரசியல் ஆலோசகராக இருப்பது, அண்மையில் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்த டயானா கமகேவின் கணவர் சேனக டி சில்வா ஆவார்.

பொன்சேகா விரைவில் சமகி ஜன பலவேகவில் இருந்து விலகி பாராளுமன்றத்தில் சுயேட்சையாக களமிறங்க தயாராகி வருவதாக அந்த தரப்பில் இருந்து வருகின்ற செய்திகள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி வேட்பாளராக இருந்தாலும் அடுத்த முறை பொன்சேகாவால் பாராளுமன்றத்திற்கு வர முடியுமா என்ற கேள்வி அரசியல் களத்தில் பேசப்பட்டு வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here