மே 31ஆம் திகதி கட்சித் தாவல்…

Date:

எதிர்வரும் வெள்ளிக்கிழமை அதாவது மே 31ஆம் திகதி எதிர்க்கட்சி எம்பிக்கள் குழு ஒன்று அரசாங்கத்தில் இணையவுள்ளதாக அரசியல் களத்தில் ஒரு செய்தி வேகமாக பரவி வருகின்றது.

07 பேர் அரசாங்கத்துடன் இணையவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆனால் அவ்வப்போது எதிர்கட்சி எம்பிகள் நிறைய தாவுகின்றனர். இவ்வளவு தாவுகின்றனர் என்பது இரண்டு வருடங்களாக கேட்கும் கதைகள்.

கிறிஸ்துமஸுக்கு வரும், புத்தாண்டுக்கு வரும், ஜனாதிபதியின் நாட்டுக்கு விஜயம் செய்த பின், சிங்களப் புத்தாண்டுக்கு, வெசாக் போயா.. இப்படி எத்தனையோ தடவைகள் செய்திகளாக வந்துள்ளன.

எவ்வாறாயினும், எதிர்வரும் ஜூன் மாதம் 15ஆம் திகதி வரையில் எதிர்க்கட்சி உறுப்பினர்களை அழைத்து வருவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு பசில் ராஜபக்ஷ அவகாசம் வழங்கியுள்ளதாக பேசப்படுகிறது.

ஜனாதிபதியின் வாக்குறுதியின்படி, சமகி ஜன பலவேகவில் இருந்து 25 பேரை அந்த நேரத்தில் அழைத்து வர முடியாவிட்டால், ஜனாதிபதித் தேர்தலுக்கு பொஹொட்டுவவிலிருந்து தனி வேட்பாளர் நியமிக்கப்படுவார்.

அந்த வேட்பாளர் தம்மிக்க பெரேராவாக இருக்கலாம். எவ்வாறாயினும், ஜூலை மாத மத்தியில் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் இருக்கும்.

எனவே, இந்த ஜூன் மாதம் இலங்கை அரசியலுக்கு மிகவும் முக்கியமானதாகும். அதாவது பல விஷயங்கள் நடக்கலாம். காத்திருக்க வேண்டும்…

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தூங்கிக் கொண்டிருந்த நபர் மீது துப்பாக்கிச் சூடு

பாணந்துறை - ஹிரண பொலிஸ் பிரிவின் மாலமுல்ல பகுதியில் இன்று (ஜூலை...

அரசாங்கம் எவ்வாறு முகம் கொடுக்கப்போகிறது? கடைப்பிடக்கப்போகும் கொள்கை யாது? அரசாங்கத்தின் பதில் என்ன?

ஐக்கிய அமெரிக்க குடியரசு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இலங்கையிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி...

இரு முக்கிய பாதாள குழு தலைவர்கள் கைது?

கணேமுல்ல சஞ்சீவ கொலைக்கு மூளையாக செயல்பட்டதாகக் கூறப்படும் கெஹல்பத்தர பத்மே மற்றும்...

நிஷாந்த ஜெயவீர எம்பியாக சத்தியபிரமாணம்

தேசிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட நிஷாந்த...