தேர்தலை ஒத்திவைப்பது ஜனநாயகத்துக்கு ஆரோக்கியமானதல்ல

0
83

தேர்தல் ஒத்திவைக்கப்படுகின்றமையானது, ஜனநாயகத்திற்கு ஆரோக்கியமானதல்ல என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

தனது X வலைத்தளத்தில் பதிவொன்றை பதிவிட்டு இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து குறித்த பதிவில்,

ஜனாதிபதியினதும், பாராளுமன்றத்தினதும் காலத்தை நீடிப்பதானது, ஜனநாயக சமூகத்தின் அடிப்படை கொள்கையை பாதிக்கும் எனவும் அவர் கூறுகின்றார்.

மக்களின் விருப்பத்திற்கு அமைய, ஸ்த்திரதன்மையை ஏற்படுத்தப்பட வேண்டுமே தவிர, மக்களின் குரல்களை தாமதப்படுத்தி ஏற்படுத்தக்கூடாது என நாமல் ராஜபக்ஸ தெரிவிக்கின்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here