இலங்கையில் தகவல் தொழில்நுட்பத் துறையில் பத்து இலட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில் தம்மிக்க மற்றும் பிரிசில்லா பெரேரா அறக்கட்டளையால் ஆரம்பிக்கப்பட்டுள்ள DP கல்வி தகவல் தொழில்நுட்ப வளாகத் திட்டத்தின் 140வது கிளை மே 27 ஆம் திகதி ஹம்பாந்தோட்டை அங்குனகொலபலஸ்ஸ பகுதியில் திறந்து வைக்கப்பட்டது.
அது அங்குனகொலபலஸ்ஸ அலுத்வெவ புராண ரஜமஹா விகாரையில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த தகவல் தொழில்நுட்ப வளாகக் கிளையை அமைப்பதற்காக, இராஜாங்க மின்சாரம் மற்றும் எரிசக்தித் துறை அமைச்சர் டி.வி.சானக்க பங்களிப்பை வழங்கியதுடன், இம்மையம் அவரால் திறந்து வைக்கப்பட்டது.
இங்கு 800 மாணவர்கள் இலவச கணினி மொழிக் கல்வி பெற வசதி செய்யப்பட்டுள்ளது.
DP Education IT Campus திட்டத்தின் மூலம் முற்றிலும் இலவசமாக வழங்கப்படும் வேலைவாய்ப்பு சார்ந்த கணினி மொழிப் பாடத்தின் மதிப்பு 25 லட்சம் ரூபாய்.
இன்றே உங்கள் பிள்ளையை DP Education IT வளாகத்துடன் இணைக்கவும்.