கிரேக்க பிணை முறி தொடர்பான வழக்கில் இருந்து மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட 5 பிரதிவாதிகளும் கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
2012 இல் கிரேக்கத்தின் பிணை முறிகளில் முதலீடு செய்து, அரசாங்கத்திற்கு 1.84 பில்லியன் ரூபா நட்டத்தை ஏற்படுத்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
பிரதிவாதிகள் தரப்பில் முன்வைக்கப்பட்ட அடிப்படை ஆட்சேபனைகளை கருத்தில் கொண்டு அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட 5 பிரதிவாதிகளும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில் உயர் நிதிமன்றத்தின் தீர்மானம் பெற்றுக்கொடுக்கப்பட்டு 10 வருடங்கள் கழித்து, இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பிரதிவாதி தரப்பு சுட்டிக்காட்டியது.
இதேவேளை, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நியமிக்கப்படுவதற்கு முன்னர் குற்றப்பத்திரிகையில் கையொப்பமிட்டுள்ளதாக பிரதிவாதி சட்டத்தரணிகள் இதன்போது சுட்டிக்காட்டினர்.
இந்த விடயங்களை ஆராய்ந்த கொழும்பு மேல் நீதிமன்றம் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட 5 பிரதிவாதிகளை விடுவித்து உத்தரவிட்டுள்ளது.