நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஜீவன் தொண்டமான், அண்மையில் தோட்ட நிறுவனமொன்றின் பிரதான நிறைவேற்று அதிகாரியை வீட்டுக்காவலில் வைத்து கைது செய்து தனது பொருட்களை கொழும்பு தேயிலை ஏலத்திற்கு எடுத்துச் செல்ல அனுமதிக்க மாட்டோம் என அச்சுறுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் எதிர்வரும் தேயிலை ஏலத்தில் கலந்து கொள்ளாதிருக்க சமூக வலைத்தளங்கள் ஊடாக கலந்துரையாடி வருகின்ற நிலையில், எதிர்வரும் செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் நடைபெறவுள்ள தேயிலை ஏலத்திற்கு தேயிலை வழங்க வேண்டாம் எனவும், தமது உயிருக்கு அரசியல் பாதுகாப்பு கிடைக்கும் வரை தோட்டங்களுக்கு செல்ல வேண்டாம் எனவும் நிர்வாகம் முன்மொழிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த வியாழன் அன்று நுவரெலியா பீட்ரூ தோட்டத்திற்குள் நுழைந்த அமைச்சர் ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட குழுவினர் களனிவெளி பெருந்தோட்ட நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி அனுர வீரகோரனை தடுத்து நிறுத்தி மணிக்கணக்கில் அச்சுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
தோட்ட நிறுவன மேலாளர்களின் வாழ்க்கை பாதுகாப்பற்ற நிலையை இது உணர்த்துகிறது. இது தொடர்பில் கடந்த வெள்ளிக்கிழமை தேயிலை கைத்தொழில்துறை தொடர்பான உயர் அதிகாரிகள் குழுவொன்று சந்தித்து கலந்துரையாடியதாக உண்மைகளை வெளிப்படுத்திய தோட்டக்காரர்கள் சங்கத்தின் சிரேஷ்ட பிரதிநிதி ஒருவர் மேலும் தெரிவித்தார்.
கொழும்பு தேயிலை ஏலத்தின் இரண்டு நாட்களில் 250 முதல் 300 மில்லியன் அமெரிக்க டொலர் வரையிலான வர்த்தகம் பதிவாகியுள்ளதாகவும், தேயிலை ஏலத்தில் இலங்கை தேயிலை உற்பத்திகள் முன்வைக்கப்படாவிட்டால் பெரும் அபாயம் இருப்பதாகவும் பெருந்தோட்ட சங்கத்தின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.