மீகொடவில் கார் மோதியதில் 6 பேர் உயிரிழப்பு

Date:

கொழும்பின் புறநகரான மீகொட பகுதியில் தன்சல் ஒன்றுக்கு வரிசையில் நின்றுகொண்டிருந்த மக்கள் கூட்டத்தின் மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதுடன் 7 பேர் படுகாயமைடந்துள்ளனர். இச்சம்பவம் நேற்று (31) நள்ளிரவு வேளை இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சகோதரர்கள், ஒரு தம்பதியினர் மற்றும் மேலும் இரண்டு பெண்கள் ஆவர்.

விபத்தில் காயமடைந்த மேலும் 7 பேர் ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பிலியந்தலவைச் சேர்ந்த 42 வயதான வாடகை கார் சாரதி விபத்து நடந்த நேரத்தில் மது போதையில் இருந்ததாகக் கண்டறியப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தை ஏற்படுத்திய, கார் சாரதி அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்ற போது கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து மீகொட பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சரண குணவர்தனவுக்கு 4 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை

ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் நான்கு வழக்குகளிலும் குற்றவாளியாகக் காணப்பட்ட முன்னாள் பிரதி...

ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் நிறுத்தப்படக்கூடாது

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் நிறுத்தப்படக்கூடாது என...

பரீட்சை திகதி அறிவிப்பு

2026ஆம் ஆண்டுக்குரிய தரம் 5 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை ஓகஸ்ட் மாதம்...

ஜனாதிபதிக்கு சிறீதரன் எம்.பி அவசர கடிதம்…!

​பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சொல்லிசைக் கலைஞர் கணேஸ்குமார்...