வெளியில் சுதந்திரமாகச் சுற்றித் திரிந்த துமிந்த சில்வாவிற்கு ஏற்பட்டுள்ள நிலை

Date:

வீடமைப்பு அதிகார சபையின் தலைவர் துமிந்த சில்வா, ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்த வைத்தியசாலையின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள துமிந்த சில்வாவை கைது செய்வதற்காக குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் அதிகாரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதேவேளை துமிந்த சில்வாவைவுக்கு வழங்கப்பட்ட பொது மன்னிப்பு செயற்பாட்டை தற்காலிகமாக இடைநிறுத்திய உயர் நீதிமன்றம், அவரை உடனடியாக கைது செய்யுமாறு நேற்று குற்றவியல் விசாரணை திணைக்களத்திற்கு உத்தரவிட்டிருந்தது.

அத்துடன் நீதிமன்றத்தின் இந்த இடைக்கால உத்தரவை நடைமுறைப்படுத்த குற்றவியல் விசாரணை திணைக்களத்திற்கு உதவுமாறு சட்டமா அதிபருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டது.

இதனை தவிர உயர் நீதிமன்றம் துமிந்த சில்வாவின் கடவுச்சீட்டை முடக்கியும் இடைக்கால உத்தரவை பிறப்பித்தது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இதுவரை 465 பேர் பலி

நாட்டின் 25 மாவட்டங்களையும் பாதித்த அனர்த்த நிலைமை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை...

மீண்டும் காலநிலை மாற்றம்

அடுத்த சில நாட்களில் வடகிழக்கு பருவமழை படிப்படியாக தீவில் நிலைபெறும் என்று...

சி.பி. ரத்நாயக்க விளக்கமறியலில்

கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்கவை எதிர்வரும் 16 ஆம்...

திருகோணமலையில் ஒருவர் சுட்டுக் கொலை

திருகோணமலையில் நேற்று (01) மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர்...