பொசன் போயாவை முன்னிட்டு பல கைதிகளுக்கு பொது மன்னிப்பு!

Date:

பொசன் பௌர்ணமியை முன்னிட்டு சிறைக் கைதிகள் பலருக்கு விசேட அரச பொது மன்னிப்பு வழங்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்.

விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்ட இந்த மன்னிப்பு அரசியலமைப்பின் மூலம் அரச தலைவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் விளக்கமளித்துள்ளது.

பல கட்டுப்பாடுகள் மற்றும் நிபந்தனைகளுடன் கைதிகளுக்கு விசேட பொதுமன்னிப்பு வழங்கப்பட உள்ளது.

அபராதம் செலுத்தாததால் சிறை தண்டனை அனுபவித்து வரும் கைதிகளின் எஞ்சிய தண்டனை காலத்தை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

அபராதம் உட்பட 40 வருடங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு நாளையுடன் 20 வருட சிறைத்தண்டனையை அனுபவித்த கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படவுள்ளது.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சரண குணவர்தனவுக்கு 4 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை

ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் நான்கு வழக்குகளிலும் குற்றவாளியாகக் காணப்பட்ட முன்னாள் பிரதி...

ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் நிறுத்தப்படக்கூடாது

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் நிறுத்தப்படக்கூடாது என...

பரீட்சை திகதி அறிவிப்பு

2026ஆம் ஆண்டுக்குரிய தரம் 5 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை ஓகஸ்ட் மாதம்...

ஜனாதிபதிக்கு சிறீதரன் எம்.பி அவசர கடிதம்…!

​பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சொல்லிசைக் கலைஞர் கணேஸ்குமார்...