நளின் பண்டார பயணித்த ஜீப் மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்து

Date:

இன்று (03) அதிகாலை 4.00 மணியளவில் கொழும்பு-கண்டி பிரதான வீதியில் கொங்கஸ்தெனிய சந்திக்கு அருகில் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார பயணித்த ஜீப் மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் சாரதி காயமடைந்துள்ளதாக நிட்டம்புவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பாராளுமன்ற உறுப்பினரின் கார் கண்டியிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த போது வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது ஜீப் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விபத்தில் பாராளுமன்ற உறுப்பினருக்கோ அல்லது பயணித்த எவருக்கோ காயம் ஏற்படவில்லை எனவும் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் மாத்திரம் காயமடைந்து வத்துப்பிட்டிவளை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் நிட்டம்புவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

10 அம்சக் கோரிக்கைகளை இந்திய உப-ஜனாதிபதியிடம் முன்வைக்க மனோ அணி திட்டம்

இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மலையக தமிழர்களில் எவரும் விரும்புகின்ற பட்சத்தில்,...

முக்கிய கோரிக்கைகளுடன் இந்திய துணை ஜனாதிபதியை சந்திக்க இ.தொ.கா தயார்

இலங்கைக்கு நாளை உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ள உள்ள இந்திய துணை ஜனாதிபதி...

JVPஇல் கோடீஸ்வரர்கள் உருவாகுவது மகிழ்ச்சி

ஜனதா விமுக்தி பெரமுன (JVP) கட்சியிலிருந்து கோடீஸ்வரர்கள் உருவாகுவது குறித்து தாம்...

நிலக்கரி மோசடிக்கு முழு அமைச்சரவை பொறுப்பேற்க வேண்டும் – SJB

மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி மற்றும் அமைச்சின் செயலாளர்...