மே 15ஆம் திகதி முதல் நேற்று (02ஆம் திகதி) வரையான 19 நாட்களில் ஏற்பட்ட அனர்த்தங்களினால் 15 மரணங்கள் பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
கொழும்பு, காலி, இரத்தினபுரி, புத்தளம், நுவரெலியா, பதுளை மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் இந்த மரணங்கள் பதிவாகியுள்ளன.
பெரும்பாலான இறப்புகள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளன. அனர்த்தங்களினால் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ள மரணங்களின் எண்ணிக்கை 04 ஆகும்.
புத்தளம் மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் தலா மூன்று மரணங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதில் 6 பேர் கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழந்துள்ளனர். அதாவது நேற்று (02)இந்த மரணங்கள் அவிசாவளை மற்றும் முல்லட்டியான பகுதிகளில் பதிவாகியுள்ளன.
அவிசாவளை பிரதேசத்தில் மண் மேடு சரிந்து விழுந்ததில் 11 வயது சிறுமி உயிரிழந்துள்ளதுடன், முலட்டியானவில் மண் மேடு சரிந்து விழுந்ததில் 20 மற்றும் 27 வயதுடைய இருவர் உயிரிழந்துள்ளனர்.
அவிசாவளை பிரதேசத்தில் நீரில் அடித்துச் செல்லப்பட்ட 78 வயதுடைய ஆண், 29 வயதுடைய பெண் மற்றும் ஏழு வயது சிறுமி உயிரிழந்துள்ளதுடன், மரங்கள் முறிந்து விழுந்ததில் ஏற்பட்ட காயங்களினால் 09 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.