மின்சார சட்டமூலத்தில் அரசாங்கத்திற்கு வெற்றி

Date:

இலங்கை மின்சார சட்டமூலம் இன்று (06) பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு 44 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

இன்று சட்டமூலம் மீதான இரண்டாம் மதிப்பீடு விவாதத்தின் பின்னர் எதிர்க்கட்சியினால் வாக்கெடுப்பு கோரப்பட்டதுடன், அதற்கமைய இடம்பெற்ற வாக்கெடுப்பில் சட்டமூலத்திற்கு ஆதரவாக 103 வாக்குகளும் எதிராக 59 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

அதனையடுத்து, குழுநிலையின் போது சட்டமூலத்திற்கு திருத்தங்கள் முன்வைக்கப்பட்டதுடன், மூன்றாவது மதிப்பீடு வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது.

162 எம்பிக்கள் வாக்கெடுப்பில் கலந்து கொண்டனர். 62 எம்பிக்கள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. இதில் ஹக்கீம் , ரிசாத் , தமிழ் தேசியக் கூட்டமைப்பு போன்றவை உள்ளடங்கும்.

மின்சக்தித் துறையில் மேற்கொள்ளப்படும் மறுசீரமைப்புகளை மேற்கொள்ளத் தேவையான ஏற்பாடுகளை முன்னெடுக்கும் நோக்கில், இந்த சட்டமூலம் கடந்த ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மாகாண சபைத் தேர்தலை நடத்த புதிய சட்டம் அவசியம் – சட்டமா அதிபர் திணைக்களம்

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு பாராளுமன்றம் புதிய சட்டங்களை நிறைவேற்ற வேண்டும்...

நீரில் மூழ்கி 2 யுவதிகள் உட்பட மூவர் பலி

நொச்சியாகம- தழுவ முகத்துவாரப் பகுதியில் நீராடச் சென்ற இரு இளம் பெண்கள்...

பிரதேச சபை உறுப்பினர்கள் 5 பேர் SJB கட்சியிலிருந்து நீக்கம்

களுத்துறை மாவட்டத்தின் புலத்சிங்கள பிரதேச சபையை பிரதிநிதித்துவப்படுத்திய SJB உறுப்பினர்கள் ஐவர்...

கம்மன்பில கருத்துக்கு பொலீசார் பதில்

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது...