நிதிக்குழு உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் இன்று (07) பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.
அங்கு நிதிக்குழுவுக்கு நிரந்தர தலைவர் நியமிக்கப்படாததால் ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து ஜனாதிபதி கலந்துரையாட உள்ளார்.
நிதிக்குழுவின் நிரந்தரத் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வாவின் பெயரை எதிர்க்கட்சிகள் முன்மொழிந்த போதிலும் கிட்டத்தட்ட 06 மாதங்களாக நியமனம் நடைபெறவில்லை.
மாறாக ஆளுங்கட்சி உறுப்பினர்கள் தற்காலிக தலைவர்களை நியமித்து நிதிக்குழுவின் அனுமதியைப் பெற்றனர்.