2023 ஜனவரி முதல் 2023 மே 31 வரையான காலப்பகுதியில் 69.3 பில்லியன் ரூபா வற் வரி வருமானத்தை விட 88.7 பில்லியன் ரூபாவை திணைக்களம் ஈட்டியுள்ளதாக கலால் வரி திணைக்களம் தெரிவித்துள்ளது.
அந்த அதிகரிப்பு முன்னைய வருடத்தின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 19 பில்லியன் ரூபா அதிகரிப்பாகும். வீதமாக எடுத்துக்கொண்டால் 28% அதிகரிப்பு என மதுவரி திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் எம்.ஜே.குணசிறி தெரிவித்துள்ளார்.
கலால் திணைக்களம் 2022 ஆம் ஆண்டில் 169 பில்லியன் ரூபாவை ஈட்டியுள்ளது. இது 2023 இல் 179 பில்லியன் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
2022 உடன் ஒப்பிடுகையில், 2023 இல் 9 பில்லியன் ரூபாய்கள் அதிகம் ஈட்டப்பட்டுள்ளது. இவ்வருடத்தின் முதல் ஐந்து மாத இறுதிக்குள் 91.2 பில்லியன் ரூபா வரி வருவாயைப் பெற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த இலக்கில் இதுவரை 98 சதவீதம் எட்டப்பட்டுள்ளது.
இம்மாதம் முதல் வாரத்தில் ஏற்பட்ட அவசர நிலை காரணமாக தமது திணைக்களத்திற்கு இரண்டு பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். பல மது உற்பத்தி நிறுவனங்கள் தற்காலிகமாக உற்பத்தியை நிறுத்தியதே இதற்குக் காரணம்.
2023 ஆம் ஆண்டில், கலால் வரியின் சதவீதத்தை பதினான்கு சதவீதம் உயர்த்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது. முந்தைய ஆண்டில், இரண்டு முறை வரி சதவீதத்தை நாற்பது சதவீதம் உயர்த்தியது.
இந்தக் கண்ணோட்டத்தில், 2023 இல் வரி வருமானம் அதிகரிப்பதற்கு வரி சதவீதங்கள் அதிகரிப்பு காரணமாக இல்லை என ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டார்.
மது உற்பத்தி குறைந்து வரும் நிலையிலும், இந்த வருமானம் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.