திருமலையில் விசேட வைத்தியசாலை அமைக்க 50 ஏக்கர் காணி – ஆளுநர் நடவடிக்கை

0
227

திருகோணமலை மாவட்டத்தில் பல்தேவை வைத்தியசாலையில் அமைக்கவென 50 ஏக்கர் காணி விடுவிப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

திருகோணமலை மாவட்டத்தின் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கலந்து கொண்ட கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் இது விடயம் குறித்து பேசப்பட்டது.

திருகோணமலை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், பாராளுமன்ற உறுப்பினர் கபில நுவான் அதுகோரள மற்றும் அரசாங்க அதிபர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

யானை மனித மோதல்கள், கிராமப் பகுதிகளுக்கான பேருந்து சேவைகள், புதிய முதலீடுகளுக்கான அனுமதி, கனிம வளங்களை ஆய்வு செய்தல், கரையோரப் பகுதிகளில் மண் அரிப்பு, டெங்கு பாதித்த பகுதிகள், பல்தேவை வைத்தியசாலை நிர்மாணப் பணிகளுக்காக சுகாதார அமைச்சிற்கு 50 ஏக்கர் நிலம் விடுவித்தல் உள்ளிட்ட பல பிரச்சினைகள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here