ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் மௌபிம ஜனதா கட்சியின் தலைவர் திலித் ஜயவீரவிற்கும் இடையில் விசேட சந்திப்பொன்று கடந்த செவ்வாய்க்கிழமை (04) இடம்பெற்றது.
கடந்த செவ்வாய்க்கிழமை திலித் ஜயவீரவின் வீட்டிற்கு ஜனாதிபதி திடீரென வந்துள்ளார். இந்த நாட்களில், திலித் கொழும்பில் உள்ள பிரதான அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வருகிறார்.
ஜனாதிபதி ரணில் எந்தவித முன் பாதுகாப்பு ஏற்பாடுகளும் இன்றி, மிகவும் சாதாரண உடை அணிந்து, மூன்று மெய்ப்பாதுகாவலர்களுடன் மட்டுமே இந்த வீட்டிற்கு வந்தார்.
இதையறிந்த மக்கள் திலித்தை பார்க்க ஜனாதிபதி வந்திருக்கலாம் என்று நினைத்தனர். ஆனால் ஏற்கனவே விமல் வீரவன்ச, உதய கம்மன்பில உள்ளிட்ட சர்வஜன பல கூட்டணியின் தலைவர்கள் குழுவொன்று திலித்தின் வீட்டில் இருந்துள்ளது.
எனவே சுமார் ஒரு மணித்தியாலம் இவர்களுடன் ஜனாதிபதி மிகவும் சிநேகபூர்வமாக கலந்துரையாடினார்.
இவ்வாறான கலந்துரையாடல்களுக்குப் பின்னர் இவர்களை அரசாங்கத்தில் இணைத்துக்கொள்ள உடன்பாடு ஏற்பட்டது. அவர்களில் சிலருக்கு ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பதவிகளும் கிடைக்கப் போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி சர்வஜன பல கூட்டணியை உருவாக்கிய திலித் அணிந்திருக்கும் உரச்சக்கரமாலையை ஜனாதிபதி ரணிலின் தோளில் சுமத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கேட்கப்படுகிறது.
ஆச்சர்யப்படுவதற்கில்லை, தேர்தல் நேரம் நெருங்கிவிட்டது…