ரயில் – கார் மோதி கோர விபத்து, தந்தை, மகள் பலி

0
289

இன்று (08) காலை எந்தேரமுல்ல புகையிரத கடவையில் கார் ஒன்று புகையிரதத்துடன் மோதியதில் ஏற்பட்ட பயங்கர விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

54 வயதுடைய தந்தையும் அவரது 22 வயது மகளும் உயிரிழந்துள்ளனர்.

எதேரமுல்லையிலிருந்து வத்தளை நோக்கிச் சென்ற குறித்த கார், புகையிரத கடவையில் ஒளி சமிக்ஞைகள் ஒளிரும் போது கடக்க முயற்சித்த வேளை, பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி வந்துகொண்டிருந்த தபால் ரயிலுடன் மோதியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த விபத்தினால் பிரதான பாதையில் இயங்கும் ரயில் தாமதமாகலாம் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here