தமிழ், முஸ்லிம் கட்சிகளின் ஆதரவு சஜித்துக்கே – ஐக்கிய மக்கள் சக்தி நம்பிக்கை

0
116

“தமிழ், முஸ்லிம் கட்சிகளின் ஆதரவு சஜித் பிரேமதாஸவுக்கே. வெகுவிரைவில் மெகா கூட்டணி மலரும்.”

– இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார எம்.பி. தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-

“ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயற்படுவதற்குப் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வந்துள்ளனர். இவர்களில் கள்ளவர்கள் அற்றவர்களை நாம் இணைத்துக்கொள்வோம்.

இந்த நாட்டில் உள்ள தமிழ், முஸ்லிம் கட்சிகளின் ஆதரவு சஜித்துக்கே. பல சிங்களக் கட்சிகளும் சஜித்துக்கே ஆதரவு. எனவே, இவை அனைத்தும் இணைந்து பலமான அணி உருவாகும்.

இன்னும் மூன்று பூரணை (போயா) தினங்கள் முடிந்த பின்னர் சஜித் பிரேமதாஸவே ஜனாதிபதியாக இருப்பார். இது உறுதி.” – என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here