மொட்டுவுடனான உறவைத் துண்டித்தால் கூட்டணி அமைப்பது தொடர்பில் பேசத் தயார் – ஐ.தே.கவிடம் சஜித் அணி தெரிவிப்பு

Date:

“ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியுடனான உறவை முறித்துக்கொண்டால் ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டணி அமைப்பது தொடர்பில் பேச்சு நடத்தலாம்.”

  • இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-

“எம்மை இணைத்துக்கொள்வதற்குரிய தேவைப்பாடு ரணில் விக்கிரமசிங்கவுக்கு இருக்கலாம். ஆனால், ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணையும் திட்டம் எமக்கு இல்லை. நாட்டில் பிரதான அரசியல் கட்சி ஐக்கிய மக்கள் சக்தியாகும். எனவே, ஐக்கிய தேசியக் கட்சியுடன் பயணிக்கும் எந்த தேவைப்பாடும் எமக்குக் கிடையாது.

ரணில் விக்கிரமசிங்கவின் தலைமைத்துவம் தொடர்பில் இருந்த பிரச்சினை காரணமாகவே வெளியேறி நாம் சஜித் பிரேமதாஸ தலைமையில் தனிக்கட்சி அமைத்தோம். வெற்றியை நோக்கி எமது கட்சி பயணித்துக்கொண்டிருக்கின்றது. எம்முடன் கூட்டணி அமைப்பதற்கு பல கட்சிகளும் முன்வந்துள்ளன.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியுடனான உறவை முறித்துக்கொண்டு சஜித் பிரேமதாஸ தலைமையில் இணைந்து செயற்பட ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் முன்வந்தால் அது பற்றி பேச்சு நடத்தலாம்.” – என்றார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்

போர்டோவ், நடான்ஸ் மற்றும் எஸ்பஹான் உள்ளிட்ட ஈரானில் உள்ள மூன்று அணுசக்தி...

லஞ்சம் பெற்ற பொலிசார் கைது

அம்பாறை பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த இரண்டு பொலிஸ் சார்ஜன்ட்கள்...

நிதியமைச்சின் செயலாளராக பிரதி நிதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும?

நிதியமைச்சின் செயலாளராக பிரதி நிதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெருமவை நியமிக்க...

28 அரசியல் பிரபலங்களின் சொத்துக்கள் குறித்து விசாரணை!

குற்றப் புலனாய்வுத் துறையின் சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவு, முந்தைய அரசாங்கத்தின்...