இலங்கை மத்திய வங்கி யின் உத்தரவு

0
161

இலங்கைக்குள் ஏற்றுமதி வருமானத்தைப் பெற்றுக்கொள்ளும் அனைத்து ஏற்றுமதியாளர்களும், தங்களது மாதாந்த வருமானத்தில் எஞ்சிய தொகையை அடுத்த மாதத்தின் 10ஆம் திகதிக்கு முன்பதாகவோ அல்லது அன்றைய தினத்திற்குள்ளோ கட்டாயமாக இலங்கை ரூபாவாக மாற்ற வேண்டும் என இலங்கை மத்திய வங்கி உத்தரவிட்டுள்ளது.

ஏற்றுமதியாளர்கள் தங்களுக்குக் கிடைக்கும் மொத்த வருமானத்திலிருந்து, மத்திய வங்கியினால் அனுமதிக்கப்பட்ட குறிப்பிட்ட கொடுப்பனவுகளுக்கு மட்டுமே நிதியைப் பயன்படுத்த முடியும். அவ்வாறு பயன்படுத்திய பின்னர் கணக்கில் எஞ்சியிருக்கும் தொகையை மாத்திரமே இவ்வாறு உள்நாட்டு நாணயமான இலங்கை ரூபாவாக மாற்ற வேண்டும் என மத்திய வங்கி தெளிவுபடுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here