புத்த சாசனத்தைப் பாதுகாப்பதும், மேம்படுத்துவதும் நம் அனைவரினதும் பொறுப்பாகும் எனவும், இதற்காக புத்தசாசன அமைச்சு, புத்த சாசன நிதியம் மற்றும் பல சாசன மேம்பாட்டுச் செயற்பாடுகள் எமது நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பல்வேறு காரணிகளால், புத்த சாசனம் சில பின்னடைவுகளைச் சந்தித்துள்ளது. இந்த உன்னத சாசனத்தைப் பாதுகாப்பது சகல சாமானியர்கள் மற்றும் தேரர்களின் பொறுப்பாகும் எனவும், மதம் மற்றும் அரச ஆட்சியில் குழப்பம் ஏற்படக்கூடாது எனவும், பௌத்தத்தை அரசியல் ஆயுதமாக்குவதன் மூலம் மதத்திற்கு உரித்தான உயரிய மரியாதைக்கு குழிபறிக்கப்படும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
நாடு முழுவதிலும் உள்ள விகாரைகளில் பல தியாகங்களைச் செய்து கடினமான பயணத்தை மேற்கொண்டு வரும் மரியாதைக்குரிய மகா சங்கரத்தினத்தைப் பாதுகாப்பது அனைவரினதும் பொறுப்பு என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
புத்தபெருமான் போதித்த தசராஜ தர்மத்தின்படி அரசாங்கம் செயற்பட்டால் நாடு, தேசம், மதம், சம்புத்த சாசனம் என்பன பாதுகாக்கப்படும் எனவும், அந்த இலக்கை அடைவது அனைவரினதும் பொறுப்பாகும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.