சப்ரகமுவ மாகாணத்தின் புதிய ஆளுநராக முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்க நியமிக்கப்படுவார் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான ருவான் விஜேவர்தன தெரிவித்தார்.
பியகமவில் நடைபெற்ற கட்சியின் அதிகார சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனை தெரிவித்தார்.
நவீன் திஸாநாயக்க எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (13) சப்ரகமுவ மாகாணத்திற்கான புதிய ஆளுநராக நியமிக்கப்படுவார் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் தெரிவித்தார்.