திருடர்களைப் பிடிப்பது அரசியல்வாதிகளால் செய்யக்கூடிய வேலையல்ல, அது சுயாதீன நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
திருடர்களைப் பிடிப்பதாக சிலர் தம்பட்டம் அடித்தாலும் அது அரசியல்வாதிகளால் செய்ய முடியாத விடயம் என எம்.பி கூறினார்.
அவர் இது குறித்து மேலும் கூறுகையில்,
“பொய் கதைகள் சொல்லி திருடர்களைப் பிடிப்பது அரசியல்வாதியின் வேலையல்ல. இப்போது நான் இதைச் சொன்னால், அது என்னைத் பாதிக்க கூடும். திருடர்களைப் பிடிக்க அரசியல்வாதிகள் இல்லை. தேவையான சட்டங்களை இயற்றிய பிறகு அரசியல்வாதிகள் இருக்கிறார்கள், முறையான நிறுவன அமைப்பு உருவாக்கப்பட்டால், அந்த சுதந்திரமான நபர் மட்டுமே ஊழல் மற்றும் மோசடிக்கு எதிராக செயல்பட முடியும். இப்போது நாளிதழிலும், தொலைக்காட்சியிலும் பார்த்தால் சில நாட்களுக்குப் பிறகு, பலர் விடுதலை செய்யப்படுகின்றனர். பல வழக்குகள் போடப்பட்டாலும், வழக்குகள் வாபஸ் பெறப்படுகின்றன. இது நகைச்சுவையாக மாறிவிட்டது. எனவே, மோசடி செய்பவர்களை பிடித்து சிறையில் அடைக்கும் பணி அரசியல்வாதிகளால் செய்யப்பட வேண்டிய ஒன்றல்ல, மாறாக சுதந்திரமான நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட வேண்டும்”. என்றார்.