ரணில் – கோட்டா அரசாங்கம் இருக்கும்வரை நாட்டை கட்டியெழுப்ப முடியாது – மைத்திரி அதிரடி கருத்து

0
179

தற்போதைய அரசாங்கம் மாறும் வரை நாட்டை கட்டியெழுப்ப முடியாது என முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

குறுகிய காலத்திற்கு மட்டுப்படுத்தப்பட்ட அமைச்சரவையை கொண்ட சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதே தற்போதைய தீர்வாகும் எனவும் அவ்வாறான சர்வகட்சி அரசாங்கம் அமையுமானால் உலகில் உள்ள பல நாடுகள் இலங்கைக்கு உதவும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் நல்ல பணிகளுக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி, மின்சார சட்டத்தில் உள்ள சில பிரச்சினைகளினால் தான் வாக்களிக்கவில்லை எனவும் தெரிவித்தார்.

சீனா இலங்கைக்கு இயன்றவரை உதவி செய்யும் என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here