இன்றும் மழை

Date:

மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. 

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வடக்கு மாகாணம் மற்றும் அனுராதபுரம் மாவட்டத்தில் பலத்த மழை பெய்யக்கூடும். 

மத்திய மலைகளின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய, மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணிக்கு 50-60 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். 

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஜனாதிபதி அனுரவுக்கு நன்றி தெரிவித்தார் மோடி!

கொழும்பு கங்காராமய விகாரையில் புனித தேவ்னிமோரி (Devnimori) அவசரங்களின் (Relics) திருக்காட்சியை...

டில்வின் சில்வா உள்ளிட்ட குழு இந்தியா விஜயம்

“இந்திய கலாசார உறவுக் குழுவின்” (ICCR) அழைப்பிற்கு இணங்க மக்கள் விடுதலை...

மார்ச் 25 வரை உத்தரவு ஒத்திவைப்பு

2015 ஜனாதிபதி தேர்தல் காலத்தில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அரசியல்...

ஆன்மீக தலைவர்களை அவமதிக்கும் அமைச்சர்களின் கருத்துகளுக்கு கார்டினல் கண்டனம்

தற்போதைய அரசின் சில அமைச்சர்கள் ஆன்மீக தலைவர்களை அவமதிக்கும் வகையில் கருத்து...