மிஹிந்தலை தேரரின் முறைப்பாடு – பொலிஸ் மா அதிபர் விடுத்துள்ள உத்தரவு

Date:

மிஹிந்தலை விகாரை பொசன் பண்டிகைக்கு தயாராகி வரும் வேளையில், சந்தேகத்திற்குரிய நபர்கள் தொடர்பில் முறையான விரிவான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் வடமத்திய மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவுக்கு உத்தரவிட்டுள்ளார்.

மிஹிந்தலை விகாரையின் தலைவர் கலாநிதி வளவ ஹங்குனவெவே தம்மரதன தேரர் பொலிஸ் மா அதிபரிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைய எதிர்வரும் பொசன் பண்டிகைக்கு இடையூறு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து மிஹிந்தலைக்கு வந்து சந்தேகத்திற்கிடமான முறையில் தங்கியிருந்த ஏழு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதன் அடிப்படையில், மிஹிந்தலை விகாரை பிரதானி பொலிஸ் மா அதிபரிடம் இவ்வாறான கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இந்திய துணை ஜனாதிபதியுடன் செந்தில் தொண்டமான் சந்திப்பு!

இந்திய துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணனை இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான்...

இன்று நுகேகொடையில் பாரிய பேரணி

பல அரசியல் கட்சிகள் இணைந்து ஏற்பாடு செய்துள்ள எதிர்ப்பு பேரணி இன்று...

40 மில்லியன் மதிப்புள்ள “குஷ்” போதைப்பொருள் கடத்திய மூவர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அனைத்து சோதனைகளையும் முடித்துவிட்டு, விமான நிலையத்திற்கு வெளியே...

ரணிலுக்கு எதிராக மேல் நீதிமன்றில் வழக்கு

ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நடத்தும் விசாரணை இறுதிக்...