தேசிய மக்கள் சக்திக்கு வடக்குத் தமிழர்களின் கனிசமான ஆதரவு?

Date:

இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் ஊடாக உருவாக்கப்பட்ட இணைந்த வடக்கு, கிழக்கு மாகாணங்களை சட்ட ரீதியாக பிரிக்க நடவடிக்கை எடுப்பதில் முன்னின்று செயற்பட்ட மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் கூட்டணியான தேசிய மக்கள் சக்திக்கு வடக்குத் தமிழர்களின் கனிசமான வாக்குகள் கிடைக்குமென அந்தத கட்சியின் சிரேஷ்ட தலைவர் ஒருவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில், தமிழ் மக்கள் மீதான இன அழிப்புடன் நிறைவு பெற்ற யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் இராணுவத்திற்கு இளைஞர்களை திரட்டுவதில் முன்னின்று செயற்பட்ட மக்கள் விடுதலை முன்னணியின் தேசிய அமைப்பாளர் பிமல் ரத்நாயக்க இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிஷே்ட தலைவர் ஒருவரே இந்த விடயத்தை தன்னிடம் தெரிவித்ததாகவும், கொழும்பை அண்மித்த கடுவலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றியபோது பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

“அண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரபலமான தலைவரை சந்தித்த வேளையில் அவர் சொன்னார், தேசிய மக்கள் சக்தி தற்போது, வடக்கு மாகாணத்தில் நூற்றுக்கு 10, 15 வீத வாக்குகளைப்  பெறுவதற்கான அடித்தளம் கட்டியெழுப்பட்டுள்ளதாக. இது அதிக வாக்குகளால் வெற்றிபெறுவதற்கு போதுமானதாக இருக்கும்.” என அவர் தெரிவித்தார்.

2019ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட அநுர குமார திசாநாயக்க வன்னி தேர்தல் மாவட்டத்தில் 1,156 வாக்குகளையும், யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் 1,375 வாக்களையும் பெற்று, மொத்தமாக 2531 வாக்குகளை மாத்திரமே பெற்றிருந்தார்.

வடக்கு, மாகாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கே அதிகளவு வாக்குபலம் உள்ளதாகவும், எவ்வாறெனினும் வன்னியில் முஸ்லிம் தலைவர்களுக்கு கனிசமான ஆதரவு காணப்படுவதாகவும் இந்த நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய பிமல் ரத்நாயக்க மேலும் தெரிவித்திருந்தார்.

“வடக்கில் கூடுததலான வாக்குகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் காணப்படுகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சஜித் பிரேமதாசவுடன் ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டதால், வடக்கு மற்றும் கிழக்கு வாக்குகளில் நூற்றுக்கு 95 வீதம் வரை கிடைத்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஊடாக 10, 15 இலட்சம் வாக்குகள் கிடைத்தன. கிழக்கு மற்றும் வன்னியில் உள்ள முஸ்லிம் வாக்குகள் ரிசாட் பதியுதீனுக்கு காணப்படுகிறது. இல்லாவிடின் முஸ்லிம் காங்கிரஸுக்கு காணப்படுகிறது.” என அவர் தெரிவித்தார். 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

முதலாளிமார் சம்மேளனத்தை வன்மையாக கண்டிக்கும் செந்தில் தொண்டமான்!

இன்று தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான பேச்சுவார்த்தை சம்பள நிர்ணய...

தங்கம் விலை நிலவரம்

இலங்கை வரலாற்றில் 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை இன்று...

நிச்சயமற்ற நிலையில் மாகாண சபைத் தேர்தல்..

முரண்பட்ட காலக்கெடு மற்றும் அரசியல் சூழ்ச்சிகள் காரணமாக, வாக்காளர்கள் மற்றும் கட்சிகள்...

பிரதமர் ஹரிணி இந்தியா பயணம்

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டில்...