அரசாங்கத்தை நடத்துவதற்கு இடையூறான உள்ளகச் சூழல் ஏற்பட்டால் நாடாளுமன்றத்தைக் கலைப்பது தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்தி வருவதாக மிகவும் நம்பகமான வட்டாரங்களிலிருந்து தெரிவிக்கப்படுகிறது.
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, காமினி லோகே, ரோஹித அபேகுணவர்தன, எஸ்.எம். சந்திரசேன உட்பட மொட்டு கட்சியின் பத்து (10) சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு அமைச்சரவை அமைச்சுப் பதவிகளை வழங்குமாறு அக்கட்சியால் தொடர்ச்சியாக பிரயோகிக்கப்படுகின்ற முறையற்ற அழுத்தங்கள் தொடர்பில் ஜனாதிபதி விசேட கவனம் செலுத்தியுள்ளதாகவும் அதே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் தலைவர்களை ஜனாதிபதி இன்று (14) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்திற்கு விசேட கலந்துரையாடலொன்றிற்கு அழைத்துள்ளார். இந்த சந்திப்பிற்கு மகிந்த ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்ச ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரங்கள் மற்றும் பொருளாதார நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடும் வகையில் கடந்த திங்கட்கிழமை (12) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலுக்கு பொஹொட்டு கட்சியின் மாவட்ட தலைவர்கள் உட்பட 45 சிரேஷ்ட அரச அதிகாரிகள் 45 பேரை ஜனாதிபதி அழைத்திருந்த நிலையில் இந்த கூட்டத்திற்கு மொட்டு கட்சி மாவட்ட தலைவர்களான பவித்ரா வன்னியாராச்சி, பிரசன்ன ரணதுங்க, ரமேஷ் பத்திரன, மஹிந்தானந்த அளுத்கமகே, தேனுக விதானகமகே, கபில அத்துகோரல ஆகியோர் மாத்திரம் கலந்துகொண்டனர். அமைச்சரவை உறுப்பினர்கள் தவிர மாவட்ட தலைவர்களான தேனுக விதானகமகே, கபில அத்துகோரள மற்றும் மஹிந்தானந்த அளுத்கமகே ஆகியோர் அங்கு வந்தனர்.
எஸ்.எம்.சந்திரசேன, விமலவீர திஸாநாயக்க, காமினி லோககே, நாமல் ராஜபக்ஷ, சாகர காரியவசம், ரோஹித அபேகுணவர்தன, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட எம்.பி.க்கள் குழுவே பகிஸ்கரிப்பு குழுவில் இடம்பெற்றுள்ளது. அமைச்சர்களாக இல்லாத கட்சி உறுப்பினர்களை அழைப்பது அவசியமானால் முதலில் கட்சித் தலைவர்களுக்கு தெரியப்படுத்தவும் அதன் பின்னர் கட்சியின் ஊடாக ஜனாதிபதியை அழைக்குமாறும் மொட்டு கட்சியின் சிரேஷ்ட தலைவர் ஒருவர் தெரிவித்தார்.