மீண்டும் சந்தர்ப்பம் கோரும் மகிந்த ராஜபக்ச!

0
161

நாட்டின் மக்கள் தற்போது மிகவும் கடினமான வாழ்க்கை நிலையை எதிர்கொண்டு வருவதாகவும், பொருட்களின் விலை உயர்வால் மூன்று வேளை உணவைக் கூட பெற்றுக்கொள்வது பலருக்கு சிரமமாகியுள்ளதாகவும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

களுத்துறையில் நேற்று (13) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், “இன்று மக்கள் மிகவும் கஷ்டப்பட்டு வாழ்கிறார்கள். பலருக்கு அன்றாட உணவையே பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது” என்று கூறினார்.  

இதன்போது, மக்களை இந்த நிலைமையிலிருந்து மீட்பதற்காக எதிர்காலத்தில் என்ன திட்டங்களை முன்னெடுக்கப் போகிறீர்கள்? மேலும், கட்சி தற்போது எந்த நிலையில் உள்ளது? என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த மகிந்த ராஜபக்ஷ, “எங்களிடம் அதற்கான சக்தி இருக்கிறது. மக்களால் எங்களுக்கு ஆட்சி அதிகாரம் வழங்கப்பட்டால், அதைச் செய்து காட்டுவோம்” என்று தெரிவித்தார்.  

அவர் மேலும், தற்போதைய வாழ்க்கைச் செலவின் சுமை பொதுமக்களை கடுமையாக பாதித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here