கிழக்கில் மாத்திரமன்றி பதுளை உள்ளிட்ட முழு இலங்கைக்கும் சேவை தொடரும் – செந்தில் தொண்டமான்

0
101

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமாகிய செந்தில் தொண்டமானுக்கு பதுளை மாவட்டத்தின் பல பகுதிகளில் பொதுமக்களால் வரவேற்பளிக்கப்பட்டது.

பண்டாரவளை, ஹப்புத்தளை, பல்லேகட்டுவ பகுதிகளில் ஆதரவாளர்கள் பொதுமக்களால் இவ்வாறு வரவேற்பளிக்கப்பட்டது.

கிழக்கு மாகாண ஆளுநராக துரித சேவையை முன்னெத்து வரும் அதேவேளை பதுளை மாவட்டத்தையும் கைவிடாது வழமை போலவே மக்களுக்கு ஆற்ற வேண்டும் என பொதுமக்கள் செந்தில் தொண்டமானிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்கு பதிலளித்த செந்தில் தொண்டமான், பதுளை தனக்கு அரசியல் முகவரி அளித்த மாவட்டம். எனவே இந்த மாவட்டத்தையும் மக்களையும் கைவிடாது முன்னுரிமை கொடுத்து சேவையாற்றுவேன். அத்துடன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் என்ற வகையில் முழு இலங்கைக்கும் சேவை தொடரும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here