கிழக்கு ஆளுநர் குறித்து தௌபீக் எம்.பி புகழாரம்!

Date:

கிழக்கு மாகாண ஆளுனரின் அர்ப்பணிப்புக்களை பாராட்டுவதாகவும் சேவைகளை வாழ்த்துவதாகவும், அனுபவமும் ஆற்றலும் மிக்க ஒருவரே கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்மான் எனவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் திருகோணமலை மாவட்ட பாரளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ் தௌபீக் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண ஆளுநர் தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் ஊடகங்களுக்கு கருத்த தொடர்பில் பதில் அளிக்கும் முகமாக தௌபீக் எம்பி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஆளுநர் குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

கிழக்கு மாகாண அரசியல் வரலாற்றில் பல்வேறு ஆளுநர்களுடன் இனைந்து பணியாற்ற எனக்கு சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது இருந்தபோதிலும் ஆளுநர் செந்தில் தொண்டமானுடன் இணைந்து மக்கள் பணியாற்ற கிடைந்ததில் மிக்க மகிழ்சியடைகிறேன்.

செந்தில் தொண்டமான் சகோதர இனத்தவராக, வெளி மாகாணத்தை சேர்ந்தவராக இருந்த போதிலும், மூவின மக்களுக்கும் சிறப்பாக சேவையாற்றும் சிறந்த ஆளுநராக திகழ்கிறார்.

அரசியல்வாதிகளுடனும் பொதுமக்களுடனும் அரசு அதிகாரிகளுடனும் சிறந்த தொடர்பை ஏற்படுத்தி சிறந்த முறையில் பணியாற்றுகின்றார்.மக்கள் பிரச்சினைகளை அவரது கவனத்திற்கு கொண்டு செல்கையில் உரிய அதிகாரிகளுடன் பேசி மிக விரைவில் அதற்கான தீர்வை பெற்றுத்தருவது அவரது ஆளுமையை வெளிப்படுத்துகிறது.

திருகோணமலை மாவட்டத்தில் காணப்படும் பல்வேறு சமூக, பொருளாதார பிரச்சினைகள் தீர்பதற்கு ஆளுநர் தனக்கு உதவுதாகவும், ஆளுநருடன் இணைந்து மேலும் பல அபிவிருத்தி பணிகளை மேற்கொள்ளவிருப்பதாகவும் தெரிவித்தார்.

இன, மத, பிரதேச வேறுபாடுகளின்றி மக்கள் பணியாற்றும் ஆளுநருக்கு தனது வாழ்த்துக்களையும் பிரார்த்தனையையும் தெரிவிப்பதாக அவர் குறிப்பிட்டார்.

வேலுகுமார் ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியை சேர்ந்தவர் ஆவார். இந்நிலையில் அதே கூட்டணியில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் காங்கிரஸ் எம்பி கிழக்கு ஆளுநர் செயற்பாடுகளை பாராட்டி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

வெசாக் விடுமுறை, விசேட வர்த்தமானி

2026ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் உற்சவத்தின் உத்தியோகபூர்வ நிகழ்வு மே மாதம்...

நிதி திருட்டுக்கு ஜனாதிபதி, நிதி செயலாளர் பொறுப்பு

மத்திய காசாகாரத்திலிருந்து அமெரிக்க டாலர் 2.5 மில்லியன் தொகை காணாமல் போன...

ஷம்மி சில்வாவை அகற்றும் முடிவு பொய்

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வாவை அந்த பதவியில் இருந்து...

1000 கோடி தர முடியாது – சட்டத்தின் ஊடாக மோதி பார்ப்போம்!

விவசாயம், நிலம், பாசனம் மற்றும் கால்நடை வளங்கள் அமைச்சர் கே.டி. லால்காந்தின்...