சஜித் தோல்வியின் பிதா!

Date:

தோல்வியின் பிதாவாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மாறியுள்ளார். அதேபோல இசைப்பிரியாவின் மரணம் உட்பட முள்ளிவாய்க்கால் பேரவலத்துக்கு காரணமானவர்களுக்கு துணை நின்றவர்களுடன் இலங்கை தமிழ் அரசுக் கட்சி ஆட்சி அமைக்கிறது  என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

கொழும்பில் நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:

தோல்வியின் பிதாவாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மாறியுள்ளார். அதனால்தான் அவரின் தலைமைப்பதவிக்கு எதிராகக் கூட கட்சிக்குள் கோஷங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.

தற்போது மட்டுமல்ல, தேர்தலுக்கு முன்பு இருந்தே தேசிய மக்கள் சக்திக்கு எதிராக சாணக்கியன் உள்ளிட்டவர்கள் போலிக்கருத்துகளை பரப்பி வந்தனர். அதன் மற்றுமொரு அங்கமே பிள்ளையான் கட்சியுடனான கூட்டு கதையாகும்.

தேசிய மக்கள் சக்தி, பிள்ளையானின் கட்சியுடன் கூட்டு சேரவில்லை. எந்தவொரு கட்சியுடனும் எமக்கு டீல் கிடையாது.

என் மீது குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் சாணக்கியன் ராஜபக்ஷக்களுடன் கரம் கோர்த்து இருந்த நபர். முள்ளிவாய்க்கால் பேரவலத்துக்கு காரணமாக இருந்தவர்களுடன் யாழில் இவர்கள் ஒன்று சேரலாம்.

எனவே, சித்து விளையாட்டுகள் மூலம் தமிழ் மக்களை ஏமாற்றலாம் என சாணக்கியன் போன்றவர்கள் நினைக்கலாம். ஆனால், மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.

இலஞ்ச, ஊழல்களில் ஈடுபட்டவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர். அதனால்தான் களவாணிகள் கூட்டு சேர்ந்து, குட்டி சபைகளில் ஆட்சி அமைக்க முற்படுகின்றனர். அந்த எதிர்பார்ப்பிலும் தற்போது மண்ணை கவ்வியுள்ளனர். எனவே, சஜித்தின் தலைமைத்துவம் வேண்டாம் என ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் வலியுறுத்த ஆரம்பித்துள்ளனர் என்றார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தேசபந்துவை பதவி நீக்கும் பிரேரணை நிறைவேற்றம்

தேசபந்து தென்னகோனை பொலிஸ்மா அதிபர் பதவியில் இருந்து நீக்கும் பிரேரணை மீதான...

BYD சிக்களுக்கு மத்தியில் மேலும் ஒரு வழக்கு!

கொழும்பில் சில நாட்களுக்கு முன்பு திறக்கப்பட்ட “கனவுகளின் நகரம் - இலங்கை”...

சூதாட்டத்தில் ஈடுபட்ட 11 இந்தியர்கள் கைது

இணையம் வழியாக சூதாட்டத்தில் ஈடுபட்ட 08 வெளிநாட்டு சந்தேக நபர்களையும், 03...

ராமேஸ்வரம் – தலைமன்னார் இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து துவங்க ஆய்வு

ராமேஸ்வரம் - இலங்கை தலைமன்னார் இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்தை துவங்குவதற்கு...