நாடளாவிய ரீதியில் எண்ணெய் வரிசைகளில் குண்டர்கள் ஆட்சி

0
277

நாடளாவிய ரீதியில் எரிபொருள் வரிசையில் குண்டர்கள் ஆட்சி செய்து வருவதாகவும் அவர்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல்வாதிகளுடன் தொடர்புள்ள குண்டர்கள் எனவும் தகவல்கள் கிடைக்கப்பெறுவதாக ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

“மிக நீண்ட எண்ணெய் வரிசைகள் இந்த எண்ணெய் வரிசைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. மக்கள் பாரிய சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். எண்ணெய் வரிசைகள் எங்கும் நிறைந்துள்ளன. சில குண்டர்கள் வரிசைகளின் அதிகாரத்தை கையகப்படுத்துவதாகவும் அல்லது வற்புறுத்துவதாகவும் செய்திகள் உள்ளன.
இந்த வன்முறைச் செயல்களில் அரச அதிகாரம் பெற்ற அரசியல் வாதிகளின் அடியாட்களும், அரசியல்வாதிகளும், அதாவது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை சார்ந்தவர்களே நேரடியாக ஈடுபட்டுள்ளனர். அதிகாரத்தில் இருக்கும் அரசியல்வாதிகளின் அனுசரணையுடன் நாடளாவிய ரீதியில் அனைத்து வரிசைகளிலும் இந்த குண்டர்கள் ஈடுபடுகிறார்களா என்ற கேள்வி எமக்கு உள்ளது.

நேற்று (20) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே ஓமல்பே சோபித தேரர் இதனை தெரிவித்துள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here