ஜப்பான் வெளியுறவுத்துறை துணை அமைச்சர் Shunsuke Takei மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் இடையே டோக்கியோ வெளியுறவு அமைச்சகத்தில் கலந்துரையாடல் இடம்பெற்றது.
நெருக்கடி நிலையின் போது சவாலை ஏற்று இலங்கையை மிக விரைவாக மீட்டெடுத்தமைக்காக இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஜப்பான் இணை அமைச்சர் பாராட்டு தெரிவித்ததாக செந்தில் தொண்டமான் கூறினார்.
கனிம மணல் மதிப்பு கூட்டல் தொழிற்சாலைகள், நீர்வாழ் கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறையில் ஜப்பானுடன் இணைந்து புதிய தொழில்நுட்பங்களை மேற்கொள்ள கிழக்கு மாகாணம் எடுத்த முயற்சிகளுக்கு ஜப்பான் வெளிவிவகார இணை அமைச்சர் நன்றி தெரிவித்தார்.
இந்த திட்டங்களை மேம்படுத்த ஜப்பான் அரசு தனது முழு உதவியையும் உறுதி செய்ததாக கிழக்கு மாகாண ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.



