எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இராணுவம் – பொலிஸ் மோதல்

0
51

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிக்கும் இராணுவ அதிகாரிக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது.

வரகாபொல தும்மலதெனிய பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவ அதிகாரி ஒருவருக்கும் பொலிஸ் உத்தியோகத்தருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது இராணுவ அதிகாரி மற்றும் பொலிஸ் உத்தியோகத்தருக்கு இடையே மோதல் ஏற்பட்டது.

இராணுவ அதிகாரியினால் தாக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் வரகாபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தாக்குதல் சம்பவம் தொடர்பில் இராணுவ அதிகாரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் இன்று வரகாபொல நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here