Sunday, June 30, 2024

Latest Posts

இலங்கையின் விசேட தூதுக் குழு ரஷ்யா விஜயம்!

ரஷ்ய – உக்ரேன் யுத்தத்திற்கு மத்தியில் சிக்கியுள்ள இலங்கையர்கள் தொடர்பில் ஆராய்வதற்காக விசேட தூதுக்குழுவொன்று இன்று (24) ரஷ்யா செல்லவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் அடங்கிய 6 பேர் கொண்ட குழுவொன்றே இவ்வாறு ரஷ்யாவுக்கு பயணிக்கவுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விசேட தூதுக்குழுவுக்கும் ரஷ்ய அரசாங்கப் பிரதிநிதிகளுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு மொஸ்கோவில் இடம்பெறவுள்ளதாகவும், இதன்போது பல சுற்று இராஜதந்திர பேச்சுவார்த்தைகள் நடைபெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.