Tuesday, September 10, 2024

Latest Posts

பத்து லட்சம் பேருக்கு காணி உறுதிப் பத்திரம் – பிரதமர்

பத்திரம் இல்லாத இலட்சக்கணக்கான இலங்கையர்களுக்கு காணி மற்றும் வீட்டு உரிமைகளை சட்ட ரீதியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் ‘அனைவருக்கும் காணி’ வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இத்திட்டமானது சுற்றுலா மற்றும் காணி அமைச்சினால் காணி சீர்திருத்த ஆணைக்குழு மற்றும் காணி ஆணையாளர் நாயகம் திணைக்களத்தின் ஊடாக நடைமுறைப்படுத்தப்படுகிறது.

சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையில், காணிக்கான சட்டப்பூர்வ உரிமை இல்லாத அனைத்து நபர்களுக்கும் காணி உரிமையை வழங்குவதற்கான முதல் படியாக ‘சொந்தமான காணி’ உறுதிப்பத்திரங்கள் வழங்கப்படவுள்ளதாக தெரிவித்தார்.

பிறப்பிடத்தை இழந்தவர்களுக்கு சட்ட உரிமையுடன் கூடிய காணி வழங்கும் நோக்குடன் தயாரிக்கப்பட்ட இந்த வேலைத்திட்டத்தின் கீழ் வாரத்திற்கு 1000 முதல் 3000 வரையிலான உறுதிப்பத்திரங்கள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்ச்சிக்கு இணையாக புத்தளம் மற்றும் குருநாகல் பிரதேச செயலகங்களில் உரிமைப் பத்திரங்கள் வழங்கப்பட்டன.

உரிமைப் பத்திரங்கள் வழங்கும் நிகழ்வில் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவும் கலந்துகொண்டார்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.