எதிர்வரும் மூன்று மாதங்களில் நாட்டின் 90% அத்தியாவசியப் பொருட்கள் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எனவும் சந்தையில் அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாது எனவும் வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
குறிப்பாக அரிசிக்கு தட்டுப்பாடு இல்லை. இலங்கையின் உள்ளூர் அரிசி மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட அரிசி சந்தைக்கு கொண்டு வர தீர்மானித்துள்ளோம் எனவும்,
“அடுத்த சில மாதங்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களை மக்களுக்கு வழங்க முடியும் என்று நாங்கள் பொறுப்புடன் கூறலாம். உதாரணத்திற்கு அடுத்த 8 மாதங்களுக்கு அரிசி பிரச்சனை இல்லை. அதுமட்டுமின்றி, “இந்திய கடன் திட்டத்தின் கீழ் 180 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய எங்களுக்கு வாய்ப்பு உள்ளது.
எனவே, அடுத்த இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குள் இந்தியாவில் இருந்து 90% அத்தியாவசியப் பொருட்களைப் பெறுவோம்.என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ இதனைத் தெரிவித்துள்ளார்.