எஸ்பிபி சரண் – சோனியா அகர்வால் 3ம் திருமணம்

0
269

சமீபத்தில் மறைந்த பாலசுப்ரமணியத்தின் மகனும் பிரபல நடிகருமான எஸ்பிபி சரண் உடன் சோனியா அகர்வால் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இருவரும் அவரவர் சமூகவலைதளப்பக்கத்தில் பகிர்ந்தனர். அதோடு , “ஏதோ புதியது உருவாகிறது” என்று எழுதியுள்ளார். இது பல யூகங்களுக்கு வழி வகை செய்துள்ளது.

இந்நிலையில் இந்த புகைப்படம் திருமண வதந்திகளைத் தூண்டிவிட்டன மற்றும் ரசிகர்கள் இரு பிரபலங்களின் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துச் செய்திகளை வெளியிட்டு வருகின்றனர். மேலும் இது இருவரும் இணைந்து நடிக்கும் புதிய படத்திற்கான விளம்பரமாக இருக்கலாம் என்றும் சிலர் கூறி வந்தனர்.

இந்நிலையில் புதிய போஸ்டர் ஒன்றை எஸ்பிபி சரண் வெளியிட்டுள்ளார். அந்த போஸ்டரில் சோனியா அகர்வால், எஸ்பிபி சரண், சந்தோஷ் பிரதாப், அஞ்சலி உள்ளிட்டோர் உள்ளனர். அதில் வெப் சீரிஸ் மற்றும் பிலிம் புரடக்ஷன் என ஹேஷ் டேக்கும் பதிவிட்டுள்ளார். இதன்படி இந்த போட்டோஸ் வெப் சீரிஸ் விளம்பரம் என்பது உறுதியாகியுள்ளது.

நடிகை சோனியா அகர்வால், செல்வராகவனை காதலித்து 2006ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக 2010ம் ஆண்டு விவாகரத்து பெற்றனர். அதன்பிறகு தனிமையில் இருந்த சோனியா தற்போது சில திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார் எனபது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here