பாராளுமன்றத்தில் இன்று (27) நடைபெறவிருந்த விசேட கட்சித் தலைவர் கூட்டம் பிற்போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு தொடர்பான பிரேரணையை இந்த வார இறுதியில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக இந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பாராளுமன்றம் கூடுவது குறித்து ஆலோசிப்பதற்காகவே இந்த விசேட கட்சித் தலைவர் கூட்டம் அழைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
எவ்வாறாயினும், கட்சித் தலைவர்களின் கூட்டம் வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.