பல்கலைக்கழக மாணவர்களின் மஹாபொல புலமைப்பரிசில் உதவிக்காக மஹாபொல அறக்கட்டளை நிதியத்திலிருந்து மொத்தம் ரூ.310 மில்லியன் விடுவிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
கல்வி அமைச்சின் தலையீட்டின் பேரில் இந்த நிதி விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கான மஹாபொல புலமைப்பரிசில் இந்த வாரம் மாணவர்களின் கணக்கில் வரவு வைக்கப்படும் என அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.