Sunday, June 30, 2024

Latest Posts

நுவரெலியா பொது மலசலக்கூடத்திலிருந்துஇரு நாட்களில் 2 ஆண்களின் சடலங்கள் மீட்பு

நுவரெலியா பிரதான பஸ் தரிப்பிடத்தில் உள்ள பொது மலசலகூடத்தில் இருந்து ஆண்கள் இருவர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

நேற்று புதன்கிழமை இரவு ருவன்எலியாவைச் சேர்ந்த மொஹமட் இம்தியாஸ் பாசில் (வயது 72) என்ற வயோதிபரின் சடலமும், இன்று காலை பொகவந்தலாவையைச் சேர்ந்த கல்பொகே ஹேவாகே அஜித் நிஸ்ஸங்க (வயது 51) என்ற குடும்பஸ்தரின் சடலமும் மீட்கப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி இருவரும் மலசலகூடத்தில் வீழ்ந்து கிடந்ததை அவதானித்த பொதுமக்கள், 1990 அவசர அம்புலன்ஸ் சேவைக்கு அறிவித்ததையடுத்து சம்பவ இடத்துக்கு வந்தவர்கள் மேற்படி இருவரும் உயிரிழந்துள்ளமையை  உறுதிப்படுத்தினர்.

இரண்டு சடலங்களும் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.