சீனாவின் டேலியன் நகரில் இடம்பெற்று வரும் உலகப் பொருளாதார மன்றத்தின் மாநாட்டில் கலந்துக்கொள்வதற்காக பயணம் மேற்கொண்டுள்ள நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான், அங்கு பல்வேறு வகையிலான சந்திப்புக்கள் மற்றும் நிகழ்வுகளில் பங்கேற்றுவதோடு, இன்று (27) தொலைக்காட்சி ஒன்றில் நேர்காணலிலும் பங்கெடுத்திருந்தார்.
இன்று காலை Channel News Asia இல் சீனாவில் உலக பொருளாதார மாநாட்டில் நேரடியாகப் பேசினார்.
மேலும் இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர் ஜீவன் தொண்டமான்,
மிகவும் கடினமான நெருக்கடியிலிருந்து இலங்கை நாட்டின் முன்னேற்றம் அடைந்த அல்லது மீண்டுவந்த கதையை, இலங்கை நாடு திவால்நிலையில் இருந்து மீண்டு வர எடுக்கப்பட வேண்டிய கடினமான முடிவுகளையும் பகிர்ந்து கொண்டேன்.
கடந்த சில நாட்களாக, நான் அரசாங்கங்கள் மற்றும் முதலீட்டாளர்களுடன் 16 இருதரப்பு சந்திப்புகளை நடத்தியுள்ளேன், அவர்கள் அனைவரும் இலங்கையை குறிப்பிடத்தக்க அளவு மீண்டெழுந்த பயணம் மற்றும் அவை எவ்வாறு நமது வளர்ச்சி முன்னேற்றத்தின் ஒரு பகுதியாக இருக்க முடியும் என்பதைப் பற்றி அறிவதற்கு ஆர்வமாக உள்ளனர்.
எங்கள் இருதரப்பு கடனை மறுசீரமைப்பதாக நேற்று அறிவித்தோம். இது எளிதான காரியமல்ல, நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க மற்றும் நிதி அமைச்சின் அதிகாரிகள் மற்றும் ஆலோசகர்களின் கடின உழைப்பு மற்றும் முயற்சியின் விளைவாகவே இவை அனைத்தும் சாத்தியமானது என்று கருத்து பரிமாறிக்கொண்டேன்.
முதலில் அவர்களின் கடின உழைப்புக்கு நன்றி, நாம் 2 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட வலுவான மற்றும் அதிக நம்பிக்கையுள்ள தேசமாக உலகிற்கு அடியெடுத்து வைக்க முடியும் என்றும் நம் நாட்டிலும் நம் மக்களிடமும் எங்களிடம் நிறைய ஆற்றல் உள்ளது, அது பயன்படுத்தப்படாமல் உள்ளது.
இந்தச் சீர்திருத்தப் பாதையில் நாம் தொடர்ந்தால், எமது மக்களை பொருளாதாரம் வலுப்படுத்தினால், அனைத்து இலங்கையர்களுக்கும் உரிய எதிர்காலம் எமக்குக் கிடைக்கும் என்பதில் நான் உறுதியாக உள்ளேன் என்று நம்பிக்கைத் தெரிவித்துக் கொண்டார்.