தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பான அனைத்து அறிக்கைகளையும் நீதிமன்றில் சமர்பிக்க உத்தரவு

0
187

ஜனசக்தி காப்புறுதி குழுமத்தின் பணிப்பாளர் தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பில் வெளியிடப்பட வேண்டிய அனைத்து DNA அறிக்கைகள் மற்றும் தொலைபேசி தரவு பதிவுகளை உடனடியாக நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் அரச மரண விசாரணை அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கைகளின் பகுப்பாய்வு நிறைவடைந்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தொலைபேசி மூலம் அறிவித்துள்ள நிலையில், அறிக்கைகளை சமர்பிக்க உத்தரவு பிறப்பிக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விடுத்த கோரிக்கையை கருத்திற்கொண்டு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

இதன்படி, உரிய பகுப்பாய்வு அறிக்கைகளை உடனடியாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு அரச இரசாயன பகுப்பாளருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here