24 மணிநேரத்தில் 7 சிறுமிகள் மீது பாலியல் துஸ்பிரயோகம்

0
235

கடந்த 24 மணித்தியாலங்களில் 7 சிறுமிகள் பாலியல் துன்புறுத்தல் மற்றும் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் 4 பேர் 17-18 வயதுடைய சிறார்கள் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

பதிவாகியுள்ள ஏழு சம்பவங்களில் நான்கு சம்பவங்கள் கட்டாயப்படுத்தப்பட்டவை எனவும் மேலும் மூன்று சம்பவங்கள் காதல் உறவுகளால் ஏற்பட்டவை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சிறுமிகள் 14, 15, 16 மற்றும் 17 வயதுடையவர்கள் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

புஜாபிட்டிய, மருதானை, கொட்டவெஹெர, தும்மலசூரிய, பதவிய, மிட்டியகொட, யடவத்த ஆகிய இடங்களில் இருந்தும் இது தொடர்பான தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here