Monday, July 1, 2024

Latest Posts

137 இந்தியர்கள் இலங்கையில் கைது, செய்த காரியம் இதோ

ஆன்லைன் வாயிலாக நிதி மோசடியில் ஈடுபட்ட கும்பலை இலங்கை பொலீசார் நேற்று கைது செய்தனர்.

அதில், 137 பேர் இந்தியர்கள் என்பது தெரியவந்துள்ளது.

இலங்கையின் கொழும்புவைச் சேர்ந்த ஒருவர், சமீபத்தில் சமூக வலைதளம் வாயிலாக தொடர்புகொண்ட நபரிடம் பணத்தை இழந்தார். இது குறித்து அவர் பொலீசில் புகாரளித்தார்.

இந்த வழக்கு தொடர்பாக பேராதனை பகுதியில் வசித்து வரும் தந்தை, மகன் இருவரை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்து பொலீசார் விசாரித்தனர்.

விசாரணையில், இவர்கள் ஆன்லைன் வாயிலாக ஏமாற்றி பணம் பறிப்பதும், சட்டவிரோத சூதாட்டம் போன்றவற்றில் ஈடுபட்டதும், இதன் பின்னணியில் பெரிய கும்பல் இயங்கி வருவதும் தெரியவந்தது.

அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் கொழும்பு புறநகர் பகுதியான நீர்கொழும்புவின் பல்வேறு இடங்களில் நேற்று பொலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

அங்கு உள்ள சந்தேகத்திற்கிடமான சொகுசு பங்களாவை சோதனையிட்ட போது, 13 பேர் சிக்கினர். அவர்களிடம் இருந்து, 57 மொபைல் போன்கள் மற்றும் லேப்டாப்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தொடர்ந்து நடந்த சோதனையில் பலர் சிக்கினர். அவர்களிடம் இருந்து, மொத்தம் 135 மொபைல் போன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைதானவர்களில் 137 பேர் இந்தியர்கள் என பொலீசார் தெரிவித்தனர். மேலும் சிலருக்கு துபாய், ஆப்கானிஸ்தான் நாடுகளுடன் தொடர்பு உள்ளதாக கூறப்படுகிறது.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.