கிழக்கு ஆளுநரின் துரித நடவடிக்கை காரணமாக இஸ்ரேல் யுவதி மீட்பு

0
250

இஸ்ரேல் நாட்டில் இருந்து இலங்கைக்கு வருகை தந்த 25 வயதுடைய பெண் சுற்றுலா பயணி திருகோணமலையில் மர்மமான முறையில் காணாமல் போன நிலையில், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலையீட்டில் மேற்கொள்ளப்பட்ட துரித நடவடிக்கையின் பயனாக மூன்று நாட்களுக்கு பிறகு இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

பொலிஸ், இராணுவம், பிரதேச செயலகம், உப்புவேலி பிரதேச சபை, சுற்றுலாப் பணியகம் ஆகியவை மீட்பு பணி ஈடுபட ஆளுநரால் பணிப்புரை விடுக்கப்பட்டது.

ஆளுநரின் பணிப்புரைக்கு அமைய, குறித்த தரப்பினர் தேடுதல் பணியில் ஈடுப்பட்டு, மர்மமான முறையில் காணாமல் போன பெண்ணை மயங்கி கிடந்த நிலையில் சல்லி கோவிலுக்கு அருகில் இன்று மீட்டு எடுத்துள்ளனர்.

குறித்த சுற்றுலா பயணியை மருத்துவ பரிசோதனையின் பின், அவருடைய நாட்டு தூதரகத்தில் ஒப்படைக்குமாறு ஆளுநரால் கிழக்கு மாகாண சுற்றுலா பணியகத்திற்கு பணிப்புரை விடுக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here