யாழில் வன்முறை, 31 பேர் கைது

Date:

யாழ்ப்பாணம் – சிறுப்பிட்டி, நீர்வேலி பகுதியில் வீட்டினுள் புகுந்து தாக்குதல் நடத்தியமை தொடர்பில் 31 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

25 பெண்களும் 06 ஆண்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

கைது செய்யப்பட்டவர்களை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சிறுப்பிட்டி – நீர்வேலியில் நேற்றிரவு வீடொன்றுக்குள் புகுந்த சிலர், அங்கிருந்த உடைமைகளை சேதப்படுத்திய போது அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.

நிலைமையைக் கட்டுப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்த போது, பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் காயமடைந்துள்ளார்.

இதேவேளை, தாக்குதலுக்குள்ளான ஏனைய இருவர் காயமடைந்து பொலிஸ் பாதுகாப்பில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர்களையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நிதியமைச்சின் செயலாளராக பிரதி நிதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும?

நிதியமைச்சின் செயலாளராக பிரதி நிதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெருமவை நியமிக்க...

28 அரசியல் பிரபலங்களின் சொத்துக்கள் குறித்து விசாரணை!

குற்றப் புலனாய்வுத் துறையின் சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவு, முந்தைய அரசாங்கத்தின்...

மேன்முறையீட்டு நீதிமன்ற புதிய தலைவர் நியமனம்

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் புதிய தலைவராக சிரேஷ்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி...

நள்ளிரவு முதல் ரயில் வேலைநிறுத்தம்

இன்று (19) நள்ளிரவு முதல் 48 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தில்...