கண்டி சம்பவம் குறித்து சம்பத் வங்கி விசேட அறிக்கை!

0
206

கண்டி தலதா வீதியில் அமைந்துள்ள அதன் கிளை மற்றும் அங்குள்ள அதிகாரிகள் தொடர்பாக சில சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல்கள் பொய்யானவை என்றும், அதனுடன் தொடர்புடைய அனைத்து குற்றச்சாட்டுகளையும் வங்கி முற்றிலும் நிராகரிக்கிறது என்றும் சம்பத் வங்கி தெரிவித்துள்ளது.

விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு வங்கி தெரிவித்ததாவது, அந்த கிளையின் ஒரு வாடிக்கையாளர் பெற்றிருந்த சுமார் 51 மில்லியன் ரூபாய் கடன் வசதி தொடர்பான புகாரை அடிப்படையாகக் கொண்டு சமூக ஊடகங்களில் தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன என்பதாகும்.

அந்த சம்பவம் தற்போது சட்ட நடவடிக்கைகளின் கீழ் விசாரணையில் இருப்பதுடன், வங்கியும் அதன் அதிகாரிகளும் சம்பந்தப்பட்ட விசாரணை அதிகாரிகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கி வருவதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், சில சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள தகவல்களுக்கு மாறாக, சம்பத் வங்கி நிறுவனத்தின் எந்த அதிகாரியும் சிறையில் வைக்கப்படவில்லை என்றும் வங்கி வலியுறுத்தியுள்ளது.

இச்சம்பவம் தற்போது நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், சமூக ஊடகங்களில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் மற்றும் தவறாக வழிநடத்தும் கருத்துகளை நிராகரிப்பதைத் தவிர, அவை குறித்து இதற்கு மேல் கருத்து தெரிவிக்க இயலாது என்றும் வங்கி மேலும் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here